3 தலைமுறை பாடகராக இருந்து ரசிகர்களை ஈர்த்து வந்தவர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் .90களின் பிற்பகுதியில் பிரபல பாடகராக வலம் வந்த இவர் தமிழில் விஜய்,அஜித், பிரபு தேவா உள்ளிட்டோரின் 90ஸ் ஹிட்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே' போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர்.
கேகே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவர் நேற்று இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஃபர்ப்பாம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அசௌகரியமாக உணர்ந்த கேகே தனது மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் பின்பக்கமாக கைத்தாங்கலாக அழைத்து செல்லப்படுகிறார்.
பின்னர் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயக்கமுற்று விழுந்ததை அடுத்து கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மண்ணுலகைவிட்டு மறைந்த பிரபல பாடகரின் கே கே இன் கடைசி பர்பார்மன்ஸ் சமுகவைத்தளங்களில் வைரலாகிவருகின்றது. இந்த வீடியோவை கண்ணீருடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டாமனியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
- OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் KGF 2- எப்போது தெரியுமா?
- விக்ரம் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் வெறித்தனமான லுக் -சூப்பர் அப்டேட்…!
- உயிர்த்தோழனே வாழ்க என்றும் வளமுடன்-இளையராஜாவைப் பாராட்டிய பாரதிராஜா
- தளபதி 66 வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பற்றி வெளியாகிய புதிய தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!