மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆகிய துல்கர் சல்மான் 'செக்கண்டு சோவ்' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 'சீதா ராமம்' என்ற டப் திரைப்படத்தின் மூலம் பெருமளவில் மக்கள் மனதை கவர்ந்து விட்டார். அந்த அளவிற்கு இவரின் நடிப்பு காணப்பட்டது. இந்த படத்தின் மூலம் இளம் பெண்களை அதிகமாகவே கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாகவே நடிகர், நடிகைகள் பலரும் புதிது புதிதாக வீடு வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது துல்கர் சல்மானும் புதிதாக வீடு ஒன்றினை வாங்கியுள்ளார்.
அதாவது நடிகர் விஜய் நீலாங்கரை பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட வீட்டில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் ஆரியபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியதாக தகவல் வெளியானது. விஜய் வாங்கியுள்ள இந்த பிளாட்டுக்கு பக்கத்தில் தான் ஒரு வீடு வாங்கியுள்ளார் துல்கர் சல்மான்.
அந்தவகையில் ஒன்பதாயிரம் ஸ்கொயர் ஃபீட்டில் அமைந்துள்ள இந்த பிளாட் உடைய விலை 30 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!