• Sep 20 2024

நடிகர் உதயநிதிக்கு 50 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்-அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்பொழுது இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்னும் படத்தில நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை வலிமை பட தயாரிப்பாளரான போனிகபூர் தான் தயாரித்துள்ளார்.

இப்படத்தில், உதயநிதியுடன் பிக்பாஸ் ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 139 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 19 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில், இப்படத்திற்கு 50 அடி கட் அவுட், மதுரை கோபுரம் சினிமாஸில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு இது தான் உதயநிதியின் கடைசிப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement