• Sep 20 2024

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேக்கிரவுண்ட் பிரபல கண் மருத்துவமனையாம்-பங்கமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் இன்றைய தினம் தனது 48 வது பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த குஷ்பு, சிவகார்த்திகேயன், அனிரூத் ,சரத்குமார், ஹன்சிகா, சாந்தனு ,வரலக்சுமி சரத்குமார், தர்ஷன் எனப் பல பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் தளபதி விஜய்யின்66 படத்தின் தலைப்பும் பெஸ்ட் லுக் போஸ்டரும் விடப்பட்டது. அதன்படி விஜய்யின் 66 வது படத்திற்கு வாரிசு என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

இந்நிலையில், நேற்று வெளியான வாரிசு டைட்டிலை பார்த்ததுமே ரஜினியின் அடுத்த வாரிசு படத்தின் காப்பி என்றும், விஜய் அணிந்துள்ள கோட்டை பார்த்ததும் இது கபாலி கோட் ஆச்சே என்றும் கிண்டல் செய்தனர். அனைத்துக்கும் மேலாக, The Boss Returns எனும் சப் லைனை பார்த்ததும்.. ப்பா. இவன் சிவாஜியையும் விட்டு வைக்கல என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

அத்தோடு கூகுளில் அலசி தேடி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேக்கிரவுண்ட் Doheny Eye Institute எனும் கண் மருத்துவமனை என போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement