விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 19ஆம் திகதி கோலாகலமாக வெளியானது. இதை தொடர்ந்து அதற்கான வசூல் வேட்டையும் உச்சத்தை தொட்டது எனலாம்.
லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல வலிமையான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
லியோ படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் லியோ படம் இதுவரையில் திரையிடப்பட்டு வருகின்றது.
முல் நாளில் மட்டுமே சுமார் 148.5 கோடி வசூல் செய்த லியோ படம், உலகளவில் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் லியோ படம் பார்ப்பதற்கு சென்ற ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் திரும்பி வந்துள்ளனர்.
இது தொடர்பாக வினாவிய போது, ' எமது பகுதியில் இரண்டு திரையரங்குகள் மட்டுமே உண்டு. பிரபல நடிகர்களின் படம் என்றால் டிக்கெட் எடுப்பது மிகவும் சிரமமாகவே காணப்படுகிறது. இவ்வாறான நிலையிலேயே லியோ படம் திரையிடப்பட்டு இரண்டு வாரங்களை கடந்த நிலையில் அதற்கான கூட்டம் இன்னும் ஓயவில்லை. 6.30 ஷோவ்க்கு மதியமே போய் டிக்கெட் எடுத்து விடுகின்றனர். தற்போது நம்பர் அடிப்படையிலேயே தான் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் டிக்கெட்டுகள் விற்பனையாகி முடிந்து விடுகின்றன. எனவே தூரத்தில் இருந்து வரும் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமையால் திரும்பி போவதும் வருவதுமாய் உள்ள நிலையே தொடர்கிறது' என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Listen News!