• Sep 20 2024

'ஜவான்' படத்தில் விஜய்..? படம் பார்க்கப் போன ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். ஏற்கெனவே இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றிருந்தது. 


ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கான் சொந்தமாக தயாரித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


அதுமட்டுமல்லாது ஜவானில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ஷாருக்கான் - அட்லீ இருவரும் கேட்டுக் கொண்டதால், விஜய் சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும், இந்த சீன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுக்கும் எனவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புரளி கிளப்பி வந்தனர்.


இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது ஜவான் படத்தில் விஜய் கண்டிப்பாக நடித்திருப்பார் என்ற நம்பிக்கையில் படம் பார்க்க போன ரசிகர்களுக்கு விஜய் ஒரு சின்ன ரோலில் கூட நடிக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement