தென்னிந்திய சினிமா உலகம் கொண்டாடிய ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் குமரேஷன் ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் அதிகளவில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 1991ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த நெப்போலியன் பின்னர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பெரம்பலூர் தொகுதியில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிறகு அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர் பின்னாளில் அமெரிக்காவில் 12000 சதுர அடியில் கால்பந்து மைதானம், திரையரங்கு, லிப்ட் வசதிகள் என நவீன வீட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் நெப்போலியனின் அமெரிக்காவில் உள்ள வீடு குறித்தும் அவர் திருநெல்வேலியில் கட்டியிருக்கும் மருத்துவமனை குறித்தும் சில வீடியோ பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வந்திருந்தது.
இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் விழாவை சமீபத்தில் அங்குள்ள நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார். அந்த சமயத்தில் பேசிய அவர் என்னுடைய மனைவிக்கு 50 பவுண் தங்கம் என்னுடைய என்று ஆசைப்பட்டேன் ஆனால், இந்தியாவில் இருந்து தங்கம் கொண்டுவர முடியாத காரணத்தால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாது தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு தான் கைப்பட வரைந்த ஒரு அழகான ஓவியத்தை பரிசாக கொடுத்திருக்கிறார் நெப்போலியனின் மகன் தனுஷ். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
Listen News!