தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
மேலும் அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்த நிலையில், இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகம் பெற்றுள்ளது.
இதில் ரொம்பவும் ஹைலைட் ஆன விஷயம் என்னவெனில் ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் தான். அதாவது யாருடைய படமாக இருந்தாலும் சரி, பொதுவாகவே படங்களைப் பற்றி கழுவி ஊற்றும் இவர், போர் தொழில் படத்தை வழக்கத்திற்கு மாறாக பாராட்டி தள்ளியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "இப்படத்தை மிஸ் பண்ணாம தியேட்டர்ல பாருங்க" எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனே இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் இப்படத்துல அப்படி என்னதான் இருக்கு..? என ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்க்க மிகவும் ஆவலுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ப்ளூ சட்டை கொடுத்த இந்த பாசிடிவ் விமர்சனமானது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.
Por Thozhil. Exciting thriller. Starring Ashok Selvan and Sarathkumar. Directed by Vignesh Raja.
Releasing today in theatres. Do not miss. pic.twitter.com/5Tqkgntz2Y
Listen News!