• Sep 21 2024

ஃப்பா நம்ம விஜய் சேதுபதியா இது -12 வருடத்திற்கு பின் கிடைக்கப்பெற்ற புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

இதனைத் தொடர்ந்து பீட்சா திரைப்படத்தில் நடித்து ஃப்பா என்ற டயலக் மூலமாக பிரபலமானார்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாது திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல 2 காதல் கடந்த 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் நேரம் என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது

இதைத்தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது GOLD திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி 12 ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய முகநூல் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியவர்கள் WIND குறும்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement