• Nov 14 2024

49 வயதில் திடீரென மரணமடைந்த 90ஸ் கிட்டுகளின் பேவரிட் சீரியல் நடிகர்- தற்கொலையா இது?- தகவல் தெரிவித்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்டுகளின் பேவரிட் நிகழ்ச்சி தான்  பவர் ரேஞ்சர்ஸ். இந்த நிகழ்ச்சியில் கிரீன் பவர் ரேஞ்சர் டாமி ஆலிவராக நடித்தவர் தான் ஜேசன் டேவிட் ஃபிராங்க் இவர் தனது 49 வயதில் நேற்றைய தினம் மரணமடைந்தார்.

இதனால் ஃபிராங்கின் மேலாளர், ஜஸ்டின் ஹன்ட் அவரது மரண செய்தியை வெளியிட்டார். ஆனால் மரணத்திற்கான காரணத்தையும் அவர் எப்போது இறந்தார் என்றும் கூறவில்லை. இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

இவரைப் போல ஃபிராங்குடன் இணைந்து நடித்த அசல் பிளாக் பவர் ரேஞ்சர் வால்டர் இம்மானுவேல் ஜோன்ஸ், தன் இன்ஸ்டாகிராமில் "எங்கள் பவர் ரேஞ்சர்ஸ் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரை இழந்ததற்காக என் இதயம் வருத்தப்படுகிறது" என்று எழுதினார். இதற்கு முன்னர் மஞ்சள் பவர் ரேஞ்சராக நடித்த துய் ட்ராங், 2001 இல் 27 வயதில் கார் விபத்தில் இறந்தார்.


ஃபிராங்க் ரெட் ஜியோ ரேஞ்சர், ரெட் டர்போ ரேஞ்சர் மற்றும் பிளாக் டினோ ரேஞ்சர் உட்பட பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார். அத்தோடு "மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்: தி மூவி" மற்றும் "டர்போ: எ பவர் ரேஞ்சர்ஸ் மூவி" ஆகிய படங்களில் நடித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு மறுதொடக்கம் செய்யப்பட்ட "பவர் ரேஞ்சர்ஸ்" இல் ஒரு கேமியோ செய்தார்.

தற்காப்புக் கலைகளின் பயிற்சியாளரான ஃபிராங்க், 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பல கலப்பு தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகினன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement