தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகிய முக்கிய திரைப்படம் தான் சூரரைப் போற்று . இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. அத்தோடு அண்மையில் தேசிய விருதும் பெற்றது.
இப்படத்தில் பொம்மி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் நம்ம வீட்டில விஷேசம் என்னும் படத்தில் நடித்திருந்தார்.
இருப்பினும் உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பின்றி தவித்து வருகின்றார். மேலும் சூரரைப் போற்று திரைப்படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் விருது கிடைக்காததால் ரசிகர்ள் கடும் சோகத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அபர்ணா பாலமுரளி ஒரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அவரது புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!