• Sep 21 2024

சீரியலில் களமிறங்கியுள்ள விஜய்சேதுபதி திரைப்பட நடிகை- அட இந்த டிவியில் தான் நடிக்கவுள்ளாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை அர்ச்சனா. பாலு மகேந்திராவின் ‘வீடு’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகி நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் சினிமாவில் படாய்ப்புக்கள் குறையத் தொடங்கியதை அடுத்து தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் கால்தடம் பதித்துள்ளார். அதாவது ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ள ‘மீனாட்சி பொண்ணுங்க’ என்ற புத்தம் புதிய சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ‘ராதாம்மா குதுரு’ என்ற சீரியலின் ரீமேக்காக உருவாகி ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீரியலில் அர்ச்சனாவுடன் இணைந்து காயத்ரி யுவராஜ், ப்ரணிகா, தக்ஷூ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ச்சனாவின் சின்னத்திரை வருகை ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement