• Nov 11 2024

சினிமாக் கலைஞர்களும் அடைமொழிப் பெயர்களும்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சொந்தப் பெயருடன் சினிமா உலகத்தில் ஒருவர் கால் பதிப்பார். ஆனால் சினிமா உலகம் அவருக்கு வேறொரு பெயரை வைத்து விடும். ஆனாலும் அந்தப் பெயரின் முன்னால் வேறு ஒரு பெயரை ஒட்டிக் கொண்ட நடிகர்களின் வரலாறு அன்று முதல் இன்று வரையில் தொடர்கிறது.

பழைய படக் காலத்தில் வெண்ணிற ஆடையென ஒரு படம் வந்தது. அந்தப்படம் பெரு வெற்றி பெற்றது. அதில் நடித்த நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா எனவும், அதன் நகைச்சுவை நடிகர் மூர்த்தி வெண்ணிறஆடை மூர்த்தி எனவும் அழைக்கப்பட்டார்கள். நிர்மலா எனும் பெயரில் வேறு ஒரு நடிகை இருந்திருந்தால் இவரை வேறுபடுத்த இவரை வெண்ணிற ஆடை நிர்மலா எனப் பெயரிட்டு இருக்கலாம்.

அப் படத்தில் நடித்த ஜெயலலிதா மட்டும் தனது ஜெயலலிதா என்ற பெயரில் தொடர்ந்து மாபெரும் நடிகையாகி தமிழக முதல்வராகும் வரை உயர்ந்தார். 1974 இல் வெளியான அவள் ஒரு தொடர்கதை எனும் படத்தில் ஜெயலட்சுமி எனும் ஓர் நடிகை அறிமுகமானார். அதில் ஒரு பாடல் அடி என்னடி உலகம் இதில் "எத்தனை கனவு……." எனும் ஒரு பாடலைப் பாடினார். அதில் இடையிடையே படாபட் எனும் வசனம் வந்ததால் அவர் படாபட் ஜெயலட்சுமி என அழைக்கப்பட்டார்.

அடுத்ததாக நடிகை சில்க் ஸ்மிதா 'வண்டிச் சக்கரம்' என்ற படத்தில் சிலுக்கு என்ற பெயரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவரும் சில்க் ஸ்மிதா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார்.

அண்மைக் கால நடிகர்களில் நம்ம விக்கிரம் சியான் விக்கிரமுக்குச் சியான் விக்கிரம் என்ற பட்டப் பெயர் உண்டு. இடிச்சபுளி செல்வராஜ், வைகைப் புயல் வடிவேல், ஜெயம் ரவி, தேங்காய்ச் சீனிவாசன் இப்படியே செல்லும் சினிமா நட்சத்திரங்களின் பட்டியல் நீளமானது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement