• Sep 20 2024

மற்றுமோர் பிரபல நடிகர் உயிரிழப்பு... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1977-ஆம் ஆண்டு வெளியான 'சங்கம்' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மூத்த நடிகர் கைலாஸ் நாத். இதனைத் தொடர்ந்து 'சேதுராமய்யர் சிபிஐ, ஸ்வாந்தம் என்ன பாடம், இரட்டை மதுரம், ஸ்ரீ நாராயண குரு, மற்றும் ஷரவர்ஷம்' எனப் பல படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இவர் மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார். அதில் 90 படங்கள் தமிழ் மொழியில் வெளியானமை குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் கலக்கி வந்த இவர் 1990 ஆம் ஆண்டில் சின்னத்திரையில் நுழைந்து 'மின்னுகெட்டு, என்டே மானசபுத்ரி, பிரணயம் மற்றும் மனசரியதே' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து அங்கும் பாராட்டைப் பெற்றார்.  


இந்நிலையில் நடிகர் கைலாஸுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறினார்கள். இதனையடுத்து கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  கல்லீரல் நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவருக்குப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement