திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாகவே பல தொடர் உயிரிழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.
இவர் 'வாழ நினைத்தால் வாழலாம், நன்றி மீண்டும் வருக, புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது' போன்ற படங்களை தயாரித்துள்ளதோடு, விலாங்கு மீன், பவர் ஆப் வுமன் , புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது 20க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!