தமிழ் சினிமாவில் ஜுவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தின் இசையமைத்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் விஜய் ஆண்டனி. இதனைத் தொடர்ந்து வேட்டைக்காரன் எனப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.
பின்பு “நான்” படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர், இப்போது தன் படங்களுக்கும் மற்ற இசையமைப்பாளர்களை வைத்து இசையமைத்து வருகின்றார்.
பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் “வள்ளிமயில்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. படபிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தமிழ் நாடு உணவு துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள். திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இதன் படபிடிப்பு திண்டுக்கல் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.
Listen News!