• Sep 20 2024

ஆக்ரோஷமாக ராகவா லாரன்ஸ் நிற்கும் ருத்ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா முனி சிவலிங்கா மொட்டை சிவா கெட்ட சிவா போன்ற இன்னும் பல திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன.

மேலும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் தான் வெளியாகியிருந்தது. இது தவிர பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையில் ருத்ரன் என்னும் படத்திலும் லாரன்ஸ் நடித்து வருகின்றார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக எதிரிகளை அடித்து நொறுக்கும் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement