• Sep 20 2024

விஜய்சேதுபதியின் ‘மைக்கேல்’திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘மைக்கேல்’ என்னும் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரிக்கின்றார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாராகி வெளிவரவிருக்கிறது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாகவும் மற்றும் நடிகை வரலட்சுமி, வருண் சந்தோஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை காலை 10.08 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் துப்பாக்கி இடம்பெற்றுள்ளதால், படம் கொஞ்சம் டெர்ராகதான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement