• Sep 20 2024

அஸ்வின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்- கோவை சரளாவா இது?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் வெளியான மைனா கும்கி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால் சமீபகாலமாக இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் கடனாளி ஆகினார். இதனால் தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இது தவிர தனது அடுத்த படத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கொண்டு புதிய படத்தை இயக்கி வந்தார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம்.

முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு தலைப்பு ‘செம்பி’ என்று வைத்துள்ளனர். மேலும் கோவை சரளா வயதான பாட்டியாக தோன்றும் வித்தியாசமான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. மற்றொரு போஸ்டரில் அஸ்வினும் ஒரு சிறுமியும் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement