பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் அடுத்த படத்தின் தலைப்பு நேற்று வெளியாகி இருந்தது . நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கும் இந்த படத்துக்கு “கொட்டுக்காளி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், படத்தின் முதல் பார்வை வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சேவல்கள் இடம் பெற்றிருந்தது. அதேப்போல், இப்பொது வெளியாகியுள்ள முதல் பார்வை வீடியோவிலும் அந்த சேவல் இடம் பெற்றுள்ளது.
மேலும், அந்த வீடியோவில் நடிகர் சூரி சிகரெட் புகைக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. இதனை வைத்து பார்க்கும்பொழுது, அந்த சேவலை வைத்து படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும் போல் தெரிகிறது. கொட்டுக்காளி படத்தை தி லிட்டில் வேவ் பேனரில் கலை அரசும் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Unveiling the first-look tease of our proud presentation, #Kottukkaali 😇
A @PsVinothraj directorial 🎬
🎥 @sakthidreamer
✂️ @thecutsmaker
Exceptional stories need exceptional performers; here we have @sooriofficial & @benanna_love 💥@Siva_Kartikeyan @KalaiArasu_ pic.twitter.com/9GsyoG6MTw
Listen News!