• Nov 10 2024

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் விமர்சனம்: யார் கூறியிருக்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தின் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றது. எனினும்  தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.

அதன்படி  ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷனில் இயக்குநர் மணிரத்னத்தை தவிர அனைவரும் கலந்து கொண்டனர்.எனினும் அப்போது இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பேசிய விஷயம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அப்போது அவர் தெரிவித்ததாவது, “பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு, Netflix, Prime போன்ற ஓடிடிகளில் வெளிநாடு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகவும் தரமாக உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்தப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement