• Nov 10 2024

சிம்பு நடித்த பத்து தல படத்தின் முதல் விமர்சனம் - STR-க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சிம்பு நடித்திருக்கும் பத்து தலை திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதால், படத்தை சென்சாரில் பார்த்தவர்களிடமிருந்து இந்த படத்தை குறித்த முதல் விமர்சனம் அதிரிப்புதிரியாக வெளியாகி உள்ளது. இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்புவுடன் இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதில் சிம்பு ஏஜிஆர் என்கின்ற கேரக்டரில் கேங்ஸ்டர் ஆக அவதாரம் எடுத்துள்ளார். மணல் மாபியாவை மையமாக வைத்து எடுத்துள்ள இந்த படத்தில் சிம்பு, இந்த சின்ன வயதில் 50 வயது உடையவராக தன்னுடைய உடல் அமைப்பின் மூலம் காண்பித்து பிரமிக்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்புவின் நடை, உடை, ரியாக்ஷன், டயலாக் என எல்லாவற்றையும் பார்க்கும்போது இந்த படம் எஸ்டிஆர்-க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கிய சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் மாஸ் என்ட்ரி ஆக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக பத்து தல சிம்புவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய படமாக அமையப்போகிறது. இந்த படத்தில் சிம்புவை பத்து விதமான கோணங்களில் பார்க்க முடியும். இந்த படம் கொஞ்ச கொஞ்சம் விக்ரம் படம் போலவே இருக்கிறதாம்.விக்ரம் படத்தில் முதல் பாதியில் கோஸ்ட் வருகிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இடைவெளிக்கு பிறகு ஒரு கட்டத்தில் உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தை முழுவதுமாக டேக் ஓவர் செய்வார்.  அதேபோன்றுதான் பத்து தல படத்திலும் இடைவெளியின் போதும், இரண்டாம் பாதியிலும் சிம்புவின் நடிப்பு பல இடங்களில் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது.


தற்போது சோசியல் மீடியாவில் இந்த படத்தின் முதல் விமர்சனம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வெறி கொண்ட வேங்கையாக மாறியிருக்கும் சிம்புவின் பத்து தல படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement