ஹரியானாவை சேர்ந்த டிவி நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சோனாலி போகட் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறிய நிலையில் அவரது பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டு வீடியோவாக பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனில் 8 ஆண்டுகளுக்கு முன்னதாக ஹர்யான்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சோனாலி போகட் ஜீ தொலைக்காட்சியில் வெளியான அம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அத்தோடு பிக்பாஸ் சீசன் 14ல் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல டிக்டாக் பிரபலமும் சின்னத்திரை நடிகையுமான சோனாலி போகட் பாஜகவில் பொறுப்புள்ள பல பதவிகளை வகித்து வந்தார்.
அத்தோடு தனது அலுவலக ஊழியர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.எனினும் அதன் பின்னர் திங்கட் கிழமை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. 41 வயதில் மாரடைப்பு காரணமாக அவர் மரணித்து விட்டார் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மரணிப்பதற்கு முதல் நாள் சாப்பிட்டு முடித்த பின்னர் தனக்கு ஒரு மாதிரியாக அசெளகர்யமாக உள்ளதாக அவரது அம்மாவுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார் சோனாலி போகட். எனினும் இந்நிலையில், சோனாலி போகட்டின் கணவரை போல இவரும் மர்மமான முறையில் மரணித்தாரா? என சந்தேகங்கள் கிளம்பி உள்ளன. மேலும் அவரது உணவில் யாராவது விஷம் கலந்து விட்டார்களா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
சோனாலி போகட்டின் சகோதரர் ராமன் செய்தியாளர்களிடம் பேசும் போது, என் சகோதரி மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கும் அளவுக்கு ஒன்றும் வீக் ஆக இல்லை.அத்தோடு அவர் ரொம்பவே ஹெல்த்தியாகவும் ஃபிட்டாகவும் இருந்தார் என்றும், பிரேத பரிசோதனை சரியாக நடைபெற வேண்டும் என்றும் பேசி உள்ளார்.
இந்நிலையில், கோவா மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டு இருக்கும் சோனாலி போகட்டின் உடல் இரு மருத்துவர்கள் முன்னிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
அத்தோடு அது வீடியோகிராஃப் ஆகவும் போலீஸாரின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சோனாலி போகட் எப்படி இறந்தார் என்பது உடல் ஆய்வுக்கூறின் அறிவிப்பை தொடர்ந்து உறுதியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனாலி போகட்டின் அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் கோவா விரைந்துள்ளனர்.
Listen News!