படையப்பா படத்தில் இடம் பெற்ற நீலாம்பரி கேரக்டருக்கு யாரை தேர்வு செய்வது என்ற பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அப்போது ரஜினிகாந்த் இந்த கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணன் சரியாக இருப்பார் என்று சொல்கிறார். இதைக் கேட்ட கே எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்தின் முடிவு சரியாக இருக்கும் என்று சொல்லி ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்கிறார். ஆனால் முதலில் ரம்யா கிருஷ்ணன் அதனை ஏற்க மறுத்து விடுகிறார்.
காரணம் அதற்கு முன்னதாக ரஜினியுடன் வடிவுக்கரசியும் மனோரமாவும் ரஜினிகாந்தை சாடுவது போல நடித்து இருந்தனர். அதனை அவரது ரசிகர்கள் பெரிதாக எதிர்த்து அவர்கள் இருவரையுமே படாத பாடு படுத்திவிட்டார்கள். ஆகையால் நான் ரஜினி சாரை எதிர்த்து நடித்தால் நான் தமிழ்நாடு பக்கமே வர முடியாது; போகிற இடமெல்லாம் எனக்கு அடி விழும் என்று சொன்னார் என்று சொல்லி வாய்ப்பை மறுத்தார்.
உடனே ரஜினி ரம்யா கிருஷ்ணனை அழைத்து பேசுகிறார். படத்தில் நீங்கள் என்னதான் வில்லியாக இருந்தாலும் இறுதிக் காட்சியில் என்னிடம் அடங்கி போவது போன்ற காட்சி அமைப்பு இருக்கிறது; அதனால் முந்தைய காட்சிகளினுடைய வீரியத்தை இந்தக் காட்சி முற்றிலுமாக குறைத்து விடும் என்று சொன்னார்.
அதே போல ரசிகர்களிடம் எதிர்ப்பு வரும் பட்சத்தில் அதனை தான் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார். இன்னும் சொல்லப்போனால் சில காட்சிகளில் ரஜினிகாந்தை கடுமையாக திட்டுவது போன்ற வசனங்கள் எல்லாம் இருந்தது. அதையெல்லாம் ரம்யா கிருஷ்ணன் பேசவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
ரஜினிகாந்த்திற்கு எதிரில் உட்கார்ந்து ஊஞ்சலில் கால் மீது கால் போட்டு உட்கார வேண்டும். அந்தக்காட்சியை கே எஸ் ரவிக்குமார் சொல்ல, நான் நடிக்கவே மாட்டேன் என்று ஒரே காலில் நின்று விட்டார் ரம்யா கிருஷ்ணன். கே எஸ் ரவிக்குமார் அவரிடம் இதுதான் படத்திற்கான ஹைலைட் சீன்; இதுவே இல்லை என்றால் எப்படி என்று சொல்லி சமாதானம் செய்தார். அதன் பின்னர் ரஜினியை உள்ளே வந்து தைரியமாக செய்.. எதுவும் ஆகாது என்று சொல்ல ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.
Listen News!