தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் கதிரவன் பணப்பெட்டியினை எடுத்துக் கொண்டு வெளியேறி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து எஞ்சி இருப்பவர்களை வின் பண்ண வைக்க வாக்குகளினை அளிக்குமாறு கூறி பலரும் தங்களுடைய கருத்துக்களினை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திருமளவாளன் எம்.பி அவர்களும் "தம்பி விக்ரமனிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" எனக் கூறி இருக்கின்றார். இதற்கு பிக்பாஸ் விமர்சகரான நடிகை வனிதா எதிர்ப்புத் தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பல கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
அதாவது அப்பதிவில் "எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்... ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும் தற்போதைய எம்.பி.யும் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளருக்கு வாக்களிக்குமாறு தனது தொண்டர்களை எவ்வாறு தூண்ட முடியும்" எனக் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "விக்ரமன் தனக்கென ஒரு அடையாளத்தையும் ரசிகர்களையும் உருவாக்கிக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். எம்.பி அவர்களே இது தேவையில்லாத அரசியல் கட்சி ஆதிக்கம்.. நீங்கள் அவரை ஒரு பொம்மை போல தோற்றமளிக்க வைக்கிறீர்கள்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு "சாமானியர்கள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோவில் அரசியல் செல்வாக்கு சரியில்லை .. இது முற்றிலும் நியாயமற்றது.. ஒரு தலைவர் தனது தொண்டர்களை ஏதாவது ஆதரிக்கச் சொன்னால் அல்லது ஒருவரை ஆதரிக்கச் சொன்னால் பெரும்பான்மை வாக்குகள் வெளியில் இருந்து வரும் .. இவ்வாறு நீங்களே பொழுதுபோக்கு தளத்தை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்" எனவும் இப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.
Listen News!