பிரபல இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியாவில் 1100 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும், ரஷ்யா மற்றும் ஜப்பானில் ரிலீஸான இந்த படம் சில பல கோடிகளை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில், கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளுக்காக இயக்குநர் ராஜமெளலி பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்கர் விருதுக்கு நிகராக பார்க்கப்படும் ஹாலிவுட் விருதான கோல்டன் குளோப் விருது விழாவில் நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. மேலும், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருது விழாவில் 5 விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் வென்றது.
கோல்டன் குளோப் விருதை தொடர்ந்து ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த சண்டை பயிற்சி மற்றும் சிறந்த ஸ்பாட்லைட் விருது என ஒட்டுமொத்தமாக 5 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்தது.
வரும் மார்ச் 12ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விழாவில் வக்காண்டா ஃபாரெவர், டாப் கன் பட பாடல்களுடன் ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடல் போட்டியிட்டு வெற்றிப் பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச விருதுகளை அள்ள வேண்டும் என்கிற முனைப்பில் ஹாலிவுட்டிலேயே இயக்குநர் ராஜமெளலி முகாமிட்டுள்ளார். ராம்சரண், ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ராஜமெளலியுடன் இணைந்து விருது விழாவில் பங்கேற்று வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தை ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தனது ஆர்ஆர்ஆர் படத்தை உலகம் முழுக்க பரப்பவும் கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வெல்லவும் இயக்குநர் ராஜமெளலி 83 கோடி ரூபாய் காம்பைனுக்கு செலவிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் பிரம்மாண்ட திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் படத்தை திரையிடுவது, பிரபலங்களை ஸ்க்ரீனிங்கிற்கு அழைத்து வருவது, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நிகழ்ச்சியில் பங்கேற்க கால்ஷீட் என இத்தனை கோடிகள் செலவாகி இருப்பதாக கூறுகின்றனர்.
இப்படி ஆஸ்கர் விருதை வெல்ல 83 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? என்கிற கேள்விக்கு விடையாக சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் கதை தான் இது என்கின்றனர். உலகளவில் தனது படத்தையும் தன்னையும் மார்க்கெட் செய்து வரும் நிலையில், இந்திய சினிமாவின் மார்க்கெட்டே உலகளவில் உயரும் என்றும் அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் போது, உலகின் பல நாடுகளில் படத்தை வெளியிடுவது மட்டுமின்றி ராஜமெளலி படம் என்றதும் அதை பார்க்க அங்குள்ள மக்களும் ஆர்வம் காட்டும் பட்சத்தில் பல ஆயிரம் கோடி வசூலை ஈட்டலாம் என்கிற திட்டமிடல் தான் என்கின்றனர்.
இது காசு கொடுத்து விருது வாங்குவது இல்லை என்றும் அந்த விருதுக்கான போட்டிக்கான செலவு தான் என்றும் கூறுகின்றனர்.
Listen News!