• Nov 14 2024

அந்த ஒரு காரணத்தால் எங்களுக்குள் பிரிவு வந்துவிட்டது... விஜய்யுடனான நட்பு குறித்து வேதனையை பகிர்ந்த நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் நடிப்பவர்களை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகர் பிர்லா போஸ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் வாழ்க்கையில் பல விஷயங்களில் எடுத்த போராட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தாலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரைத்துறைக்குள் அடியெடித்து வைத்துள்ளார். 


இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றின் மூலம் தனக்கும் விஜய்க்கும் இடையிலான நட்புக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது "எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அவர் அவ்வளவு எளிதாக யாரிடம் கனெக்ட் ஆக மாட்டார். ஆனால் கனெக்ட் ஆகிவிட்டால் அவர்களை விட்டு பிரியவும் மாட்டார். ஆனால் அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு இடத்தில் தவறான புரிதல் ஏற்பட்டு விட்டது. கண்டிப்பாக அதுக்கு காரணம் நான் இல்லை என்பதை இந்த நேர்காணல் மூலமாக நான் ஓப்பனாக சொல்லிக் கொள்கிறேன்" என்றார். 


மேலும் "சிவகாசி படத்தின் உடைய ஷூட்டிங் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தின் இயக்குநர் பேரரசு என்னை வர சொல்லியிருந்தார். நானும் அங்கு போனேன். அப்போது நடிகர் விஜய்யுடன் ஒருவர் இருந்தார். அவர் ஏற்கனவே சுக்ரன் படத்தின் போது விஜய்யுடன் இருப்பதாக கூறி தானாகவே வந்து தன்னை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். இதனால் இந்த ஷூட்டிங்கில் அவரை பார்த்ததும் நான் என்ன சார் நல்லா இருக்கீங்களா? என அவரிடம் கேட்டேன். 

அதற்கு அவர் உடனே என்னை பார்த்து, வாய்ப்பு வேணும்னா எதுக்கு இங்கே வர்றீங்க? ப்ரொடியூசர் ஆபீஸ்ல போய் பாருங்க என அந்த நபர்  கூறிவிட்டார். இவர் ஏன் இப்படி நடக்கிறாரு என நினைத்த நிலையில் பின்னர் எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் விஜய் பாடலுக்கு நடனமாட சென்று விட்டார். பின் இந்த பிரச்சினையில் வெளியே சென்று நான் வெயிலில் நின்று கொண்டிருந்தேன். ஷூட் முடித்து வந்த விஜய், ஏன் வெளியே நிற்கிறாய்? உள்ளே வா என என்னை அழைத்தார். அப்படிப்பட்ட ஓர் உன்னதமான நட்பு எங்களுடையது. 


ஆனால் நான் நடந்த சம்பவத்தை நினைத்து அவர் பேச்சை அந்த சமயத்தில் கேட்கவே இல்லை. விஜய்க்கு எந்த வித ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. இதை இப்போது நினைத்தால் குழந்தைத்தனமாக இருக்கிறது. எனக்கும் அந்த நபருக்கும் சண்டை நடந்தது விஜய்க்கு இன்னமும் தெரியாது” எனவும் பிர்லா போஸ் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement