தமிழ் சினிமாவில் வரிசையாக கமர்ஷியல் இயக்குநராக வலம் வருபவர் தான் அட்லி. இவற்றைய தினம் ஜவான் என்ரது இயக்கத்தில் நேற்றைய தினம் ஜவான் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. உலகமெங்கும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்போன்ஸ் கிடைத்து வருகின்றது.
ஜவான் படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பால் இயக்குனர் அட்லி செம்ம குஷியில் உள்ளார்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 9 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு மீர் என பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தனர். இருப்பினும் மகனை இதுவரை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்தே வைத்திருந்தார் அட்லி.இந்நிலையில், ஜவான் படம் ரிலீஸ் ஆன கையோடு, அட்லியின் மகன் மீரின் புகைப்படமும் முதன்முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் மகன் மீர் தன் மீது நிம்மதியாக தூங்கும்போது உற்சாகம் பொங்க சிரித்தபடி செல்பி எடுத்திருக்கிறார் . இந்தப் புகைப்படம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!