• Nov 19 2024

கோப்ரா படத்தின் நீளம் குறைப்பு பற்றி முதல் முறையாக வெளிப்படையாகக் கூறிய இயக்குநர்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிய திரைப்படம் தான் கோப்ரா. இந்தப் படத்தை தயாரிப்பாளரான லலித் குமார் தயாரித்துள்ளதோடு  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது.‌


மேலும் இந்த திரைப்படம் மூன்று மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னர் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டது.இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இயக்குநர் அஜய் ஞானமுத்து கலந்து கொண்டார்.

அப்போது படத்தின் நீளம் 3:3:3 என வைத்தது குறித்து ஒரு கேள்வியை அந்த ரசிகர் கேட்டார். அதற்கு பதில் அளித்த அஜய் ஞானமுத்து, "சரி!! 3 என் அதிர்ஷ்ட எண் அல்ல!! 3+3+3=9 என்பதும் எனது அதிர்ஷ்ட எண் அல்ல!! 3*3*3-27 என்பதும் எனது அதிர்ஷ்ட எண் அல்ல, எந்த முக்கிய விவரங்களையும் தவற விடாமல் இருக்க நாங்கள் வெட்டி உருவாக்கிய பதிப்பு 3:3:3 என வந்தது, 


மேலும் படம் பார்வையாளர்களுக்கு பிடிக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதேபோல் சில பார்வையாளர்கள் முழு பதிப்பை இன்னும் விரும்புகிறார்கள் !! ஆனால் நீளம் சரிபார்க்கப்பட வேண்டும்!! அடுத்த முறை இதனை சரி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில்  விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளதோடு இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement