• Nov 14 2024

''மூன்று நாளாக, 3 வேளை ஊறுகாயை சாப்பிட்டு மயங்கி விழுந்தேன்''.. எதிர்நீச்சல் சீரியல் நடிகரின் சோக கதை

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மூன்று  நாட்களுக்கு ஊறுகாய், தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்தேன் என எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் ஜி. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் படத்தை இயக்கினார். இவர் தற்போது எதிர்நீச்சல் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர் ஆதிமுத்து குணசேகரன் எனும் கேரக்டரில் கனிகாவின் கணவராக நடித்து வருகிறார். 

இந்த சீரியலில் குணசேகரன் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. அவருடைய முக பாவனை, பாடி லேங்குவேஜ் எல்லாமே அருமை. 

இந்த நிலையில் சாய் வித் சித்ரா எனும் நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து பேசுகையில், ''நான் தேனியிலிருந்து சென்னைக்கு வந்த போது ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தேன். அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடி கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் காசு இல்லாத நேரத்தில் என் நண்பர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன்.

ஒரு முறை தீபாவளி பண்டிகை வந்தது. என் அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். ஊருக்கு போக கூட காசு இல்லாத நிலையில் அறையிலேயே தங்கிவிட்டேன். இதையடுத்து பசித்தது, வழக்கம் போல அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலுக்கு போனேன், அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

உடனே வேறு ஹோட்டலில் சாப்பிடலாம் என இருந்த என்னிடம் காசு இல்லை. சரி மற்ற அறைகளில் இருக்கும் நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என போனேன், அவர்களது அறைகளிலும் பூட்டு இருந்தது. என்னை தவிர எல்லாருமே தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்றுவிட்டார்கள். பசி வயிற்றை கிள்ளியது, என்ன செய்வது என தெரியவில்லை.

அறையில் ஏதாவது உலர் உணவுகள் இருக்கிறதா என பார்த்தேன். ஒன்றுமே இல்லை. அங்கு ஒரு ஊறுகாய் பாட்டில் மட்டுமே இருந்தது. ஆபத்துக்கு பாவமில்லை என கருதி ஊறுகாயை நக்குவது அதன் காரத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, இப்படி 3 வேளையும் 3 நாட்களுக்கு செய்தேன். பிறகு 4ஆவது நாள் எனக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். அதற்குள் அறைக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அங்கு குளுகோஸ் ஏற்றினார்கள். இவ்வாறு மாரிமுத்து கூறியிருந்தார்.


Advertisement

Advertisement