• Nov 14 2024

“இன்னும் கொஞ்ச நாள்ல லவ் டூடே படத்தை மறந்திடுவாங்க” -இதை விட அந்தப் படம் ஓகே- ஓபனாக பேசிய பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படைப்பாக அமைந்த திரைப்படம் “லவ் டூடே”. இப்படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தானெ இயக்கி நடித்திருந்தார்.

இவர் இதற்கு முதல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.தற்கால இளைஞர்களை கவரும் வகையில் அமைந்த கதையும், ,மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட திரைக்கதையும் இத்திரைப்படத்தை கடந்த வருடத்தின் முக்கிய வெற்றித் திரைப்படமாக ஆக்கியது.


வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. இத்திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் சுசீந்திரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் “லவ் டூடே” திரைப்படம் தொடர்பில் ஒரு ஷாக் ஆன கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது,“லவ் டூடே திரைப்படம் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படம் கிடையாது. இந்த தலைமுறைக்கு மிகவும் மனதைக் கவர்ந்த திரைப்படமாக இருக்கும். காதல் திரைப்படம் போலவோ, 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் போலவோ காலத்துக்கும் லவ் டூடே பேசப்படாது.


இந்த தலைமுறையினருக்கு ஒரு ஜாலியான ,சுவாரிசயமான திரைப்படம் என்பதால் லவ் டூடே மிகப்பெரிய வெற்றியைக் அள்ளித்தந்தது . ஒரு 5 வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் லவ் டூடே திரைப்படத்தை நம்மால் கனெக்ட் செய்துகொள்ள முடியாது.

ஆனால் அதை மீறி ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் ஜெயித்துக் காட்டிய பிரதீப் ரங்கநாதனை நினைக்க எனக்கு பெருமையாக இருக்கிறது. லவ் டூடே படத்தோடு ஒப்பிடும்போது பிரதீப் ரங்கநாதனின் கோமாளி திரைப்படம்தான் சிறந்த திரைப்படம்” என சுசீந்திரன் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.





Advertisement

Advertisement