• Nov 17 2024

''நல்ல வேளை நான் பொண்ணா பிறக்கல இல்லனா.. வெற்றிமாறனை Love பண்ணிருப்பேன்.."- விஜய் சேதுபதியின் சுவாரிஸ்ய பேட்டி..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

விடுதலை படத்தில்  பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். 

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்த படத்தின் போஸ்ட் பிர்ஸ் மீட்டில் பேசிய விஜய் சேதுபதி, “ஒரு கதையை இயக்குநர்கள் சொல்லும் வார்த்தைகள் மூலம் நடிககள் எவ்வளவு தூரம் கிரகித்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியம்.  பெருமாள் வாத்தியாருக்கும் - சுனில் மேனனுக்குமான் காட்சியை படப்பிடிப்பு பண்ணும்போது, வெற்றிமாறன் சார் பரபரப்பாக இருந்தார். என்னால் அந்த சீனை டெலிவரி செய்ய முடியவில்லை.

அப்போது அவரிடம் நான் சொன்னேன், சார் நீங்கள் மிகவும் பரபர என இருக்கிறீர்கள். நீங்கள் நிதானமாக இருந்தால் நான் இதை செய்ய முடியும் என்றேன், அதன் பிறகு அவருடைய நிதானத்தின் வழியே அதை ஹேண்டில் செய்தேன்போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் வெற்றி சார் செய்து காட்டும்போது, அவருடைய எனர்ஜி, உடல் மொழி எல்லாம் எனக்கு பயத்தை உருவாக்கியது. 

அப்படி அவரிடம் இருந்து எடுத்துதான் நான் வழங்கினேன். இப்படத்தின் பெருவெடிப்பு, டப்பிங், மேக்கிங் எல்லாமே வெற்றி சார் சிந்தனையில் இருந்தவை தான். யானைகள் அடக்கமாக இருந்தால் எப்படி இருக்கும்? நான் பொண்ணா இருந்தால் அவரை உஷார் பண்ணிடுவேன் போல. இப்போது கூட அவரை பார்த்து பேச கூச்சமாக இருக்கும். இவ்வளவு பெரிய நிலத்தை உருவாக்கி, இவ்வளவு பெரிய படத்தின் வழியே சிந்தனையை உருவாக்குவது பெரிய செயல்.

இன்னும் அவரிடம் கேட்க பல கேள்விகள் இருக்கு. ஆச்சரியம் இருக்கிறது. படம் ரெடியாகிட்டு இருக்கும்போதே, படம் குறித்த என்னுடைய கருத்தை கேட்டார். படத்தில் சொல்லும் வசனம் போலவே, யாரையும் மேல/கீழ என நடத்த மாட்டார். அவரிடம் எதையும் கேட்க முடியும். நான் கேட்டிருக்கிறேன். ஏனென்றால் அவருடைய நிறைய வாசிப்பு பழக்கம் கொண்டவர். அப்படி வெற்றிமாறனின் உடல்மொழி வழியாக கிரகித்து தான் இந்த வாத்தியார் கதாபாத்திரத்தை வழங்கியுள்ளேன்” என பேசினார்.


Advertisement

Advertisement