• Nov 10 2024

AR ரஹ்மான் முதல் நயன்தாரா வரை.. இந்திரஜா திருமணத்திற்கு கொடுத்த கிஃப்ட் என்ன? என்ன?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தனது தாய்மாமனான கார்த்திக் என்பவரைகடந்த 24ம் திகதி  திருமணம் செய்துள்ளார் இந்திரஜா. இவர்களின் திருமணம் மதுரையில்  கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் நடந்த திருமண ரிசப்ஷனில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

இந்த நிலையில், தனது திருமணத்திற்கு பிரபலங்கள் கொடுத்த பரிசு பொருட்களை தனது சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் இந்திரஜா. தற்போது அவை வைரலாகி வருகின்றன.

அதாவது, சுமார் 25 லட்சம் மதிப்புள்ள வைரக்கல் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச்சை கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளாராம். அதேபோல இன்னொரு நண்பர் இந்திரஜா - கார்த்திக் இருவருக்குமே தனித்தனியாக ஆடம்பர  வாட்ச்சை பரிசாக வழங்கி உள்ளார்.


மேலும் வித்தியாசமான பூக்களை கொண்ட பொக்கே ஒன்றையும்,  இவர்களது பெயர் பதித்த தங்க சங்கிலியையும்  உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

அதுபோல திருமணத்துக்கு நேரில் வர முடியாத நயன்தாரா வீடியோ காலில் இந்திரஜா சங்கருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


இதைத்தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் மணமக்களுக்கு அழகான பொக்கே ஒன்றை வழங்கியதுடன் வாழ்த்து கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இவ்வாறு பிரபலங்கள் வழங்கிய பரிசு பொருட்களை விட தங்கம் வெள்ளியினால் ஆன பல விலை உயர்ந்த பொருட்கள் இந்திரஜா  திருமணத்துக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement