விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும்எதிர்பார்க்காத விதமாக ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் பிரிந்து விட்டனர். அதிலும் ஜீவா வீட்டை விட்டு வௌியேறியது அனைவரும் எதிர்பார்த்த விடயம் தான்.
ஆனால் இதையே சாட்டாக வைத்து ஐஸ்வர்யாவும் கண்ணனைக் கூட்டிக் கொண்டு கிளம்பியது தான் யாராலும் எதிர்பார்க்காத விடயமாக இருக்கின்றது.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் மீனா தன்னுடைய தங்கை கல்யாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது தங்கையின் கழுத்தில் தானே தாலியைக் கட்டி இனிமேல் ஜீவாவுக்கு இரண்டு பொண்டாட்டி என்றும் பிரசாந்திற்கு பொண்டாட்டி தான் என்றும் காமெடியாகப் பேசியுள்ளார்.
இதனால் ஜீவா இவ்வளவு சீரியஸாக வசனம் பேசியும் மீனா காமெடியாக இருந்திருக்கிறாங்களே என கலாய்த்து வருகின்றனர். அத்தோடு இனிமேல் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
Listen News!