சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.
இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.
லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.
மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
12 நாள் முடிவிலேயே இப்படம் ரூ. 100 கோடியை உலகம் முழுவதும் தாண்டிவிட்டது என லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அத்தோடு இப்போது தமிழகத்திலேயே படம் ரூ. 100 கோடியை நெருங்கி வருகிறது, இன்னும் சில நாட்களில் தாண்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படம் ரிலீஸ் ஆகி இப்போது வரை முழுவதும் ரூ. 111 கோடி வரை வசூலித்துவிட்டதாம்.
Listen News!