• Nov 17 2024

விருதுகளை அள்ளிக்குவித்த மண்டேலா முதல் சூரரைப் போற்று-68வது தேசிய விருதுகளின் முழு விவரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் வெளியான சிறந்த படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் இதில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் யோகி பாபு நடித்த மண்டேலா ஆகிய படங்கள் அதிகம் விருதுகள் ஜெயித்து இருக்கின்றன.

விருதுகள் முழு விவரம்

சிறந்த தமிழ் படம்- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த பின்னணி இசை- சூரரைப் போற்று ஜி.வி பிரகாஷ்

சிறந்த எடிட்டிங்- சிரவஞ்சனையும் இன்னும் சில பெண்களும் ஸ்ரீகர் பிரசாத்

சிறந்த திரைக்கதை- சூரரைப் போற்று (ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா)

சிறந்த வசனம்- மண்டேலா (,மடோன் அஸ்வின்)

சிறந்த துணை நடிகை- லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிரவஞ்சனையும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த நடிகர்- சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (தன்ஹாஜி)

சிறந்த அறிமுக இயக்குனர்- மண்டேலா (மடோன் அஸ்வின்)

சிறந்த படம்- சூரரைப் போற்று

சிறந்த இயக்கம்- ஐயப்பனும் கோஷியும்

சிறந்த ஸ்டண்ட்- ஐயப்பனும் கோஷியும் (ராஜசேகர், மாபியா சசி, சுப்ரீம் சுந்தர்)

சிறந்த நடன அமைப்பு- நாட்டியம் (தெலுங்கு) சந்தியா ராஜு

சிறந்த லிரிக்ஸ்- சாயினா (ஹிந்தி) மனோஜ் முண்டஷிர்

சிறந்த மியூசிக் (பாடல்)- தமன் (ஆலா வைகுண்டபுரம்லோ)

சிறந்த மேக்கப்ஆர்ட்டிஸ்ட்- டிவி ராம் பாபு(நாட்டியம்)

சிறந்த காஸ்டியூம் டிசைனர்- Nachiket Barve and Mahesh Sherla (தன்ஹாஜி)

சிறந்த ப்ரொடக்ஷன்டிசைன்- Kappela (மலையாளம்)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement