• Sep 20 2024

ரிலீஸ் தேதி கிடைக்காமல் திணறும் 'கங்குவா' படக்குழு - குழப்பத்தில் சூர்யா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கிறது.

சூர்யாவுடன் திஷா பதானி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் கங்குவா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சூர்யாவின் 42வது படமான இதன் டைட்டில் சில வாரங்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டது. அதன்படி கங்குவா என்ற இந்த டைட்டில், 'நெருப்பு' என்பதன் பின்னணியில் வைக்கப்பட்டுள்ளதாம். சூர்யாவின் கெட்டப், கேரக்டர் உட்பட அனைத்துமே புதுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கங்குவா டைட்டிலை தொடர்ந்து வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழுவினர் பிளான் செய்திருந்தனர். ஏற்கனவே இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்குப் போட்டியாக கங்குவா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கமல் - ஷங்கர் காம்போவில் உருவாகும் இந்தியன் 2ம் பாகமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், இந்தியன் 2 ரிலீஸ் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக இருக்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சூர்யாவின் கங்குவா படமும் பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் எடிட்டிங், கிராபிக்ஸ், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு பல மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

இதனால், இப்போது கங்குவா படமும் 2024 ஏப்ரலில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், விரைவில் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யும் என சொல்லப்படுகிறது. 


Advertisement

Advertisement