சூர்யாவின் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இன்றைய தினம் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதால் நேற்றைய தினம் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்நிலையில், தற்போது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. குதிரையில் வாள் ஏந்தியபடி செம்ம மாஸ் காட்டுகிறார் . க்ளிம்ப்ஸ் வீடியோவில் நடிப்பில் தெறிக்கவிட்ட சூர்யா, இந்த போஸ்டரிலும் டெரர் லுக்கில் ஸ்கோர் செய்துள்ளார். ஆக்ஷன் ப்ளஸ் ஃபேண்டசி ஜானரில் பீரியட் படமாக உருவாகும் கங்குவா, தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிக்கட்டத்தில் உள்ள கங்குவா படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னரே கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகுமாம். அதேபோல், ரிலீஸ் தேதியையும் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அறிவிக்கலாம் என கங்குவா படக்குழு முடிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!