• Sep 20 2024

கௌதம் மேனனின் ஆசையை நிறைவேற்றிய அவரது மூத்த மகன்- அட இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை இயக்கிய பல இயக்குநர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான மின்னலே, காக்கா காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா படங்களின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே ஃபேமஸ் எனலாம்.

அத்தோடு இப்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இது தவிர பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தும் வருகின்றார். மேலும் இவர் திரைத்துறையைத் தாண்டி கிரிக்கெட் விளையாட்டிலும் அதிக ஈடுபாடு உடையவராம்.

இதனால் தனது இளமைக் காலத்தில் சினிமாவா? அல்லது கிரிக்கெட்டா? எதை வாழ்க்கையாகத் தேர்வு செய்வது என முடிவெடுக்கும் நிலை வரும் போது சினிமாவை தேவு செய்திருக்கிறார் . இதனை அவரே பழைய பேட்டியில் குடும்பத்தை பற்றி கூறும்போது கூறியுள்ளார்.

இவரின் மகன்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறவே முடிவெடுத்து அதற்கான முயற்சியில் மூத்த மகன் ஆர்யா தற்போது வெற்றியும் கண்டிருக்கிறார். தற்போது ஆரம்பித்துள்ள தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளராக களமிறங்கி உள்ளார் இயக்குநர் கெளதம் மேனன் மகன் ஆர்யா யோஹான் மேனன்.

நேற்று நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக இவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார். இதனால் கெளதம் மேனன் மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement