• Sep 20 2024

மஞ்சிமாவின் நெற்றியில் முத்தமிடும் கௌதம் கார்த்தி- வெளியாகிய லேட்டஸ்ட் ரொமான்டிக் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 


இப்படத்தில் அவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமா மோகனுக்கு இடையே காதல் மலர்ந்தது.


இதையடுத்து மூன்று ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.


இந்த நிலையில் மஞ்சிமா தனமு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிலரின் உதவி இல்லாமல் எமது திருமணம் நடந்திருக்காது.அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement