• Nov 10 2024

திருமணம் குறித்து குட் நியூஸ் சொன்ன கவுதம் கார்த்திக்- பொண்ணு யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் பல நடிகர்கள் இருக்கின்றனர். இவ்வாறு நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்துடன் கடல் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கெளதம் கார்த்திக்.


இப்படத்தினை பிரமாண்ட இயக்குநர் இயக்கியிருந்ததோடு இசையமைப்பாளரான AR ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கூன் திரைப்படம் நல்லதொரு அடையாளத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

அத்தோடு தற்பொழுது நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அடுத்து 1947 போன்ற படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.

இதனிடையே தேவராட்டம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை மஞ்சிமா மோகனுடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கி வருகிறார் நடிகர் கவுதம் கார்த்திக்.



அவரே தான் மஞ்சிமா மோகனை காதலிப்பதாக கூறியுள்ளார். மஞ்சிமாவின் பிறந்த நாளின் போது அவர் குறிப்பிட்ட வாழ்த்து செய்தியும் பெரும் பேசு பொருளானது. ஆனால் தான் யாரையும் காதலிக்கவில்லை என்ற மஞ்சிமா கவுதம் கார்த்திக்குடன் காதல் என்ற வதந்தியை மறுத்தார்.

இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது காதல் வதந்திகள் குறித்து வாயே திறக்கவில்லை. அதே நேரத்தில் இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், நேரம் வரும் போது அதனை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.ஆனால் பெண் யார் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

Advertisement

Advertisement