தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் பல நடிகர்கள் இருக்கின்றனர். இவ்வாறு நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்துடன் கடல் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கெளதம் கார்த்திக்.
இப்படத்தினை பிரமாண்ட இயக்குநர் இயக்கியிருந்ததோடு இசையமைப்பாளரான AR ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கூன் திரைப்படம் நல்லதொரு அடையாளத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
அத்தோடு தற்பொழுது நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தேவராட்டம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை மஞ்சிமா மோகனுடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கி வந்தார் நடிகர் கவுதம் கார்த்திக்.
நேற்று நடிகர் கவுதம் கார்த்திக்கின் பிறந்தநாளையொட்டி நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "my favorite human" என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த அதற்கு கவுதமும் நன்றி " my favourite human" என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார்.
இருவரும் மாறி மாறி காதல் குறியீட்டை பயன்படுத்தி காதலை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.
Listen News!