தமிழ் திரையுலகில் மக்களின் எதிர்பார்ப்பை பெற்ற இயக்குனர்களில் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். காதல், ஆக்ட்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை பதித்தவர். இவரது படங்களில் பிரமாதமான டெக்னிக்கல் ஒர்க், மற்றும் ஸ்கிரீன் பிளே என வித்தியாசமான படைப்பை காணலாம். முன்னனி நடிகர் பலருடன் சேர்ந்து இவர் கொடுத்தப்படைப்புகள், இன்று பலாரால் பேசப்பட்டு வருகிறது. இவர் ஒரு இயக்குனர் மட்டுமன்றி தாயாரிப்பு, வசனம் மற்றும் பின்னனி பாடல் என அனைத்திலும் தனது திறமையை வெளிபடுத்தியுள்ளர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் விஜய் த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்களின் நடிப்பிலும் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இன்றைய தினம் உலகெங்கும் திரைக்கு வருகின்றது.லியோ திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதில் முதலில் வெளியான நான் ரெடி தான் வரவா.. பாடல் சாதனை படைக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதம் மேனன் பப்ளிக்காக இளம் பெண்ணுடன் “ நா ரெடி தான்..” பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!