கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவாகிய ’ஜோஸ்வா இமை போல் காக்க’
என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த
படத்தை பார்த்தபோது மறுபடியும் கெளதம் மேனன் ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ உள்பட கௌதம் மேனன் சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது என்பதும் அவர் ஒரு ஹிட்
படம் கொடுத்து நீண்ட வருடம் ஆகிவிட்டது என்பது தெரிந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’ஜோஷ்வா இமை போல் காக்க’
திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த
படத்தில் வழக்கம் போல் கௌதம் மேனனின்
ஸ்டைலிஷ் இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பல் இருப்பதால் கிளைமாக்ஸ் தவிர வேறு எதுவும்
புதிதாக இல்லை என்பதுதான் ஒரு வருத்தமான தகவல்.
ஒரு போதைப் பொருள் கடத்தல்காரனை கொலை செய்ய வருண்
செல்லும்போது அங்கு எதிர்பாராத விதமாக பெண் வழக்கறிஞர் ராஹியை
சந்திக்கிறார். அவரிடம் காதலை கூறும்போது அவர் ஒரு ப்ரொபஷனல்
கொலைகாரர் என்று அறிந்ததும் அவரை வெறுக்கிறார்.
இந்த நிலையில் சர்வதேச போதை மருந்து கடத்தும்
கொள்ளைக்காரன் ஒருவனை மெக்சிகோ காவல்துறையினர் பிடித்த நிலையில் அவருக்கு எதிராக வாதாட ராஹி நியமனம் செய்யப்படுகிறார்.
இந்நிலையில் அவரை கொலை செய்ய
ஆட்களை வில்லன் தரப்பினர் அனுப்புகிறார்கள். இதை தெரிந்து கொண்ட
வருண் தனது முன்னாள் காதலியை
காப்பாற்ற களமிறங்கும் போது ராஹி, வருணை
காதலிப்பதாக கூற, அதன் பிறகு
நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த படத்தின்
கதை.
ஆரம்பத்தில் சர்வதேச காண்ட்ராக்ட் கில்லர் கேரக்டராக வரும் வருண், சண்டை காட்சிகளை ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அதன் பின்னர் காதலியை
காப்பாற்ற களத்தில் இறங்கும்போது எதிரிகளைப் பந்தாடுகிறார். முழுக்க முழுக்க இந்த கேரக்டருக்கு அவர்
பொருத்தமாக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பெண் வழக்கறிஞராகவும் வருணை காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கும் ராஹிக்கு வலிமையான கேரக்டர் தான், இருப்பினும் அவர் வருணை விட
அதிக வயது உடையவராக தெரிவதால்
அக்கா போல் இருக்கிறார் என்பதுதான்
பெரும் சோகம்.
உட்கார்ந்து இடத்திலிருந்து வருணுக்கு ஐடியாக்களை சொல்லிக் கொடுக்கும் ஒரு கேரக்டரில் திவ்யதர்ஷினி
நடித்துள்ளார், மிகவும் சிறப்பான கேரக்டர், அதை அவர் மிகவும்
சிறப்பாகவே செய்துள்ளார் . எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில் யானிக் பென் ஸ்டண்ட் இயக்கத்தில்
அதிரடி ஆக்சன் காட்சிகள் சிலிர்க்க வைக்கிறது. பாடல்கள் சுமாராக இருந்தாலும் கார்த்திக் பின்னணி இசை சூப்பராக அமைத்திருக்கிறார்.
சர்வதேச காண்ட்ராக்டர் கில்லர் பல கொலைகளை நடுரோட்டிலே
செய்யும்போது போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற சில லாஜிக் மீறல்கள்
படத்தில் இருந்தாலும் கிளைமாக்ஸ் மட்டுமே உருப்படியாக உள்ளது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கௌதம் மேனனுக்கு இது ஒரு வெற்றி
படமாக இருந்திருக்கும்.
Listen News!