• Sep 20 2024

இதை பண்ணிட்டு வாங்க- வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு கௌதம் மேனன் கூறிய அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெந்து தணிந்தது காடு' படத்தை  நீங்கள் காலை 5 மணிக்கு படம் பார்க்க செல்கிறீர்கள் என்றால்,5மணி காட்சிக்கு முன் சரியாக வீட்டில் தூங்கிவிட்டு இந்த VTK -ஐப் பார்க்க வாருங்கள்.கௌதம் மேனன் கூறிய முக்கிய விடயம்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.  


மேலும் படத்தில் சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை  ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

இந்த படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.  இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன.


இது குறித்துபேசிய கௌதம் மேனன்,  நீங்கள் காலை 5 மணிக்கு படம் பார்க்க செல்கிறீர்கள் என்றால், ரசிகர்கள் காட்சிக்கு முன் சரியாக வீட்டில் தூங்கிவிட்டு இந்த VTK -ஐப் பார்க்க வாருங்கள். கதை மற்றும் கதாபாத்திரங்களின் தன்மை வியாபிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement