கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த படம் ரிலீஸ் ஆக நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தது ஒருகட்டத்தில் படம் ரிலீஸே ஆகாது , கிடப்பில் போடப்பட்டது என்றெல்லாம் வதந்திகள் வந்தன. இதற்கு முற்றுபாபுள்ளி போடுவதாயே இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அப்டேட் வந்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்
Listen News!