• Nov 14 2024

கவின், லாஸ்லியா பிரிவிற்கு காரணம் இதுதான்.. கைகலப்பு வரை சென்றதா..பரபரப்பைக் கிளப்பிய பிக் பாஸ் ராஜூவின் பேட்டி ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து Friendship என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இவரை பற்றி ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது.அது பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்த நிலையில் வெளியே வந்ததும் பிரிந்துவிட்டனர்.

இதுகுறித்து லாஸ்லியாவிடம் கேட்க அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்தது உண்மைதான் ஆனால் வெளியே வந்த பின்னர் எங்களுக்கு செட்டாகவில்லை ஆகையால் பிரிந்து விட்டோம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கவினின் நண்பரான ராஜுவிடம் இது குறித்து கேட்க இருவருக்கும் இடையே கைகலப்பு வரை சென்று விட்டது அதனால் தான் பிரிந்து விட்டனர் என கூறியுள்ளார்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் லாஸ்லியா நீ எல்லாம் எங்க அப்பாவோட கண்ணீருக்கு முன்னாடி கால் தூசுடா என கூற கவின் என்னுடைய நண்பன் என்னை அறிந்ததை நான் உன்னை அறைந்திருக்க வேண்டும். உன்னால் என் அம்மா என்னை வீட்டுக்குள் சேர்க்கவில்லை என இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளதாம் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement