தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் கயல் ஆனந்தி. தமிழில் 2014ல் வெளியான பொறியாளன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகியானார். இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் கயல் ஆனந்தி என்றே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
இயற்கை அழகி மச்ச கன்னி என்று கூறி கொண்டு இவருக்கு பின்னால் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழில் அதிகளவான படங்கள் நடிக்கவில்லை என்றாலும் கயல் படம் மூலம் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார் .தற்போது ஆனந்தி 'மங்கை' என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மகன் துஷி, ஷிவின், ராம்ஸ் உள்ளிட்ட மேலும் பலர் பலர் நடித்துள்ளனர். குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ளார்.
பட நிகழ்ச்சியில் கயல் ஆனந்தி சினிமா அனுபவங்களை பகிர்ந்தார். அவர் பேசும்போது, "நான் நடித்த 'கயல்' படம் வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மங்கை படத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய திரை உலகு வாழ்வில் இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போதே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். அப்போது சினிமாவை பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். ஆனாலும் சினிமாவில் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ அதில் கவனம் செலுத்தி கற்றுக்கொண்டு வருகிறேன்.
நான் நடித்த படங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மங்கை படம் மூலம் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறேன். படம் எல்லோருக்கும் பிடிக்கும். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள். இந்த படத்துக்கும் ஆதரவு தாருங்கள். என்று பணிவாக கூறியுள்ளார்.
Listen News!