தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே மாறினார். அவரை தொடர்ந்து நடிகையாக இருந்த ஜெயலலிதாவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வந்து தலைமை பொறுப்பை ஏற்பார் என மக்கள் பலரும் நம்பினர்.
ஒவ்வொரு படம் வரும் போதும், அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் செய்த அலப்பறைகள் தான் அடுத்து எந்தவொரு நடிகரும் அரசியல் என்ட்ரி கொடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டால் கூட மக்கள் நம்ப மறுக்க காரணமே என்கிற விமர்சனம் பலராலும் வைக்கப்படுகின்றது.
ரஜினிகாந்த் கடைசியில் இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை என சொல்லிவிட்டு இனி எப்பவும் இல்லை என்றும் தனது ஆன்மிக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.இந்நிலையில், அந்த வெற்றிடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் நடிகர் விஜய் ஈடுபட்டு வருவதாக பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்திநருக்கு அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை போடும் உத்தரவை விஜய் பிறப்பித்தார் என்கிற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக மாறியது.இந்நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேட்டியளித்த பத்திரிகையாளர் டிவி சோமு கூறுகையில், ஜிபி முத்து இப்போ அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்ன செல்வாக்கு இருக்குமோ அதே அளவுக்கு ஒரு சதவீதமோ அல்லது இரண்டு சதவீத செல்வாக்குத் தான் நடிகர் விஜய்க்கு இருக்கும் என ஓபனாக பேசி உள்ளார்.
ரஜினிக்கே 12 சதவீத செல்வாக்கு மட்டுமே இருப்பதாக கணிப்புகள் வெளியானதால் தான் அவர் பின் வாங்கினார் என்றும் நடிகர் விஜய் தனது திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் தான் இதுபோன்ற அரசியல் விஷயங்களை கையில் எடுப்பார் என்றும் இது பல காலமாக ரஜினி செய்து வந்த அதே ட்ரிக் தான் என்றும் கூறியுள்ளார். அரசியலில் இப்போதைக்கு இறங்கினால் பெரியளவில் தனக்கு செல்வாக்கு இருக்காது என்பது நடிகர் விஜய்க்கே நன்றாக தெரியும் என்றும் அதனால் அந்த முடிவுக்கு அவர் இப்போதைக்கு வர மாட்டார் என்றும் இன்னும் சில ஆண்டுகள் இப்படியே வரப்போவதாகவே பில்டப் செய்து விட்டு படங்களை ஓட வைத்துக் கொண்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்.
Listen News!