• Sep 20 2024

சாப்பிட முடியாமல் கதறி அழும் ஜெனிலியா- வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவிலே நடிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலமாகவே அறிமுகமாகி இருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துப் பிரபலமானவர். குறிப்பாக 2003-2012 காலகட்டத்தில் பல தெலுங்கு படங்களிலும் நடித்து தெலுங்கு சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் நடிகை ஜெனிலியா.

மேலும் இவர் 2006 ஆம் ஆண்டு 'பொம்மரிலு' என்ற தெலுங்கு காதல் திரைப்படத்தில் நடித்தமைக்காக தனது முதல் பிலிம்பேர் விருதையும் வென்றிருக்கின்றார்.இவ்வாறாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது கவனத்தை செலுத்தி வந்த நடிகை ஜெனிலியா பாலிவுட் சினிமாவிற்கு சென்ற இடத்தில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு அழகான மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் ஹிந்தி மொழிப் படங்களில் மட்டுமே நடித்து வருகின்ற ஜெனிலியா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தனது கணவனுடன் சேர்ந்து செய்யும் காமெடி வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழமை. அதேநேரம் இவர் ஃபிட்னஸ் பயணத்தை தொடங்கியதிலிருந்து அது பற்றிய வீடியோக்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஒர்க்கவுட் செய்தால் மட்டும் போதாது என்று உணவுக் கட்டுப்பாட்டிற்காக டயட் இருக்கவும் ஆரம்பித்து விட்டாராம்.

அத்தோடு ஜெனிலியா அவரே கஷ்டப்பட்டு சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்றயும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் "அடேங்கப்பா இவ்வளவு அதிகமாக சாப்பிடக் கூடாது. இப்பிடி ஜாஸ்தியாக சாப்பிடுவதால் தான் நீங்கள் குண்டாக இருக்கின்றீர்கள். புழுவை தான் வேக வைத்து சாப்பிடுகிறீர்களோ என்று நினைத்து விட்டோம். இது போன்ற ஒரு டயட்டை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. நீங்கள் வேற லெவல்" என்று கிண்டலாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

ஜெனிலியாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement